Wednesday, March 6, 2013

கசகசா பாயசம்








  • கசகசா பாயசம்
  • பெரிய தேங்காய் - ஒன்று
  • கசகசா - 100 கிராம்
    பொடித்த வெல்லம் - 2 கப்
    பொடித்த முந்திரி - மூன்று மேசைக்கரண்டி
    பால் - மூன்று கப்







  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கசகசா, முந்திரி இரண்டையும் போட்டு ஊற வைக்கவும்.
  • தேங்காயை துருவி வைக்கவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், ஊற வைத்த கசகசா, முந்திரி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக மை போல் அரைக்கவும்.
    வெல்லத்தை சுட வைத்த தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
    இதனை அரைத்த விழுதுடன் நன்றாக கலந்து மிதமான தீயில்வைத்து கொதிக்க வைக்கவும்.
    சிறிது கெட்டியானதும் பாலை காய்ச்சி அதில் ஊற்றி அதனுடன் ஏலக்காய் பொடி, தூவி இறக்கவும்.
  • *****************
  • இதை காக்டெயிலாகவும் பண்ணலாம்
  • தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தலா ஒரு டீஸ்பூன், கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - அரை லிட்டர், சர்க்கரை - 200 கிராம். செய்முறை: பிஸ்தா, பாதாமை  தனித்தனியே ஊற வைத்து தோல் நீக்கவும். இவற்றுடன் தேங்காய் துருவல், கசகசா சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். கடைசி சுற்றில் சர்க்கரை சேர்த்து அரைத்து எடுக்கவும். பாலை நன்கு காய்ச்சி அரைத்த கலவையை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். கொதித்து வாசனை வந்ததும்.... நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கிப் பரிமாறவும். ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறினாலும் சூப்பராக இருக்கும்.
  • ****************
  • பச்சை வாசனை பிடிக்காவிட்டால்
  • கசகசாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வருத்து ஆற வைக்கவும்.  ஆறியதும் 
  • மிக்ஸியில் தேங்காய் துருவல்,கசகசா, முந்திரி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக மை போல் அரைக்கவும்.

  • வெல்லத்தை சுட வைத்த தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

    இதனை அரைத்த விழுதுடன் நன்றாக கலந்து மிதமான தீயில்வைத்து கொதிக்க வைக்கவும்.

    சிறிது கெட்டியானதும் பாலை காய்ச்சி அதில் ஊற்றி அதனுடன் ஏலக்காய் பொடி, தூவி இறக்கவும்.

No comments: