Saturday, October 8, 2011

உக்காருக்கு ஆப்போஸிட் நில்லு

நான் தெரியாத்தனமாய் “சமைத்துப்பார்” புத்தகத்தைப் பார்த்து துவரம்பருப்பையும் சேர்த்து வேகவைத்து அது ரொம்ப கட்டியாய் போச்சு. மீனாக்ஷி பாட்டி ஏன் அப்படி குழப்பியது என்று தெரியவில்லை.

நில்லு
அப்புறம் இரண்டு நாள் முன்னால் எதுக்கு மீனாக்ஷி பாட்டியை தொந்திரவு பண்ணவேண்டும் என நானே கொஞ்சம் கடலைப் பருப்பை எடுத்து நெய்யில் வறுத்து மிக்ஸியில் அடித்து மாவாக்கி வெல்லப் பாகு காய்ச்சி கிளறியதில் செவனப்பிராஸ் ரேஞ்சுக்கு ஒரு ஐட்டம் வந்தது. உக்காருக்கு ஆப்போஸிட் நில்லு தானே. ஃப்ரிட்ஸில் வைத்து நேற்று எடுத்துப் பார்த்தால் ஊட்டி ஹோம் மேட் சாக்லேட் மாதிரி சூப்பராய் ஒரு டேஸ்ட். எல்லோரும் நில்லுவையும் பண்ணிச் சாப்பிட்டுப் பாருங்கோ.

ஒக்காரை,உக்காரை, செய்வதற்கு முழு விவரம் இந்த பேஜ்ஜுக்கு போங்க. 

http://lalithakitchen.blogspot.in/2009/04/okkarai.html

No comments: